முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்கள் முன்னேற்றத்திற்கு மக்கள் ஈடுபாடு முக்கியம் இளைஞர்கள் கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - கிராமங்கள் முன்னேற்றத்திற்கு மக்களின் ஈடுபாடு முக்கியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். கிராமப்புறங்கள் முன்னேற்றம் தொடர்பாக பிரதமரின் தேசிய திட்டம் கடந்த 4ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2ஆண்டுகளுக்கு  இளைஞர்கள்  கிராமப்பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த இரண்டு ஆண்டு பணியை அந்த இளைஞர்கள் நிறைவு செய்ததும் அடுத்த இளைஞர்கள் பிரிவு தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற முன்னேற்ற பணிக்கு வருவார்கள். கிராம முன்னேற்றத்திற்கு  தங்களை இணைத்துக் கொண்டுள்ள 200 இளைஞர்களிடம் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமரின் கிராமப்புற மேம்பாடு இளைஞர்கள்திட்டத்திற்கான ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன்.

கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காக பாடுபட தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்களை நான் பாராட்டுகிறேன். குடும்ப நெருக்கடி இருந்தபோதும் அதனை மீறி கிராமப்புற வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பிரதமரின் கிராமப்புற மேம்பாடு திட்டத்தில் இணைந்த  11 இளைஞர்கள் தாங்கள், கிராமப்புறங்களில் பெண்கள் மேம்பாடு, பிரசவ கால பெண்கள், சிசு ஆரோக்யம், கல்வி, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், ஸ்வாச்சி பாரத், ஆகிய திட்டங்கள் குறித்து தங்களை திட்ட செயல்பாடுகளை தாக்கல் செய்தனர்.

பின்னர் இளைஞர்களிடம் பிரதமர் கலந்துரையாடினார். பல்வேறு பங்கேற்பாளர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் வடகிழக்கு மாநில மேம்பாடு, கிராமப்புற கல்வி, பழங்குடியின மேம்பாடு, இயற்கை விவசாயம், மாற்றுத்திறனாளிகளின் நல வாழ்வு குறித்து தங்கள் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள். பிரதமரின் கிராமப்புற மேம்பாடு இளைஞர்கள் திட்டம்  ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் திட்டமாகும்.மாநில அரசுகளோடு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டத்தில் வறுமை ஒழிப்பு, பின் தங்கிய மற்றும் தனித்து விடப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்,ஆகியவை மேற் கொள்ளப்படுகின்றன.

இந்த திட்டம் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு கடந்த 2012ம்ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிரிவு துவக்கப்பட்டது.ஒவ் வொரு பிரிவிலும் உள்ள இளைஞர்கள் இரண்டாண்டுகள் கிராமப்புற மேம்பாடு தொடர்பாக தங்களை அர்ப்பணித்து பணிகளில் ஈடுபடுவார்கள். இளைர்கள் இரண்டு ஆண்டு காலத்தில்மேற் கொள்ளும் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் மத்திய அரசின் நிதி உதவியுடனும் ஒருங்கிணைந்த திட்ட அடிப்படையிலும் மேற் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மேம்பாடு இடைவெளி மற்றும் நிர்வாக குறைபாடு ஆகியவற்றை சரி செய்வதாக உள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் இளைஞர்கள் இரண்டு ஆண்டுகாலம் கிராமப்புற மேம்பாடு பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.

அவர்கள் முதலாண்டு பணி நிறைவு செய்ததும் அடுத்த ஓராண்டு மாநிலத்தில்  ஏதாவது ஒரு பகுதியில் பொதுச் சேவை ஆற்ற அனுப்பப்படுவார். கிராமப்புற மேம்பாடு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி கண்காணித்தல், பயிற்சி, பணிகளை மேற்பார்வையிடுதல் போன்றவற்றை டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம்(டிஐஎஸ்எஸ்) வழி நடத்துகிறது. கிராமப்புற மேம்பாடு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி ஒரு கடிதம் எழுதினார் . அந்த கடிதத்திற்கு கிராமப்புற மேம்பாடு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு வந்தது.

இதனை பிரதமர் மோடி பாராட்டினார். கிராமப்புற மேம்பாடு திட்டப்பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் செயல்பட்ட இளைஞர்கள் கூட்டத்தில்  மாற்றம் என்கிற புத்தகத்தையும் மோடிவெளியிட்டார். அந்த புத்தகம் நாடு முழுவதும் பிரதமரின் கிராமப்புற மேம் பாடு திட்டப்பணிகளில் உள்ள இளைஞர்கள் மேற் கொண்ட பணிகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்கும் இந்த நிகழ்ச்சியில்கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்