முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவின் ஏவுகனை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க் - செயற்கைகோளை ஏவுவதாக கூறி, வடகொரியா ஏவுகனையை அனுப்பு சோதனை செய்ததற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த செயல் ஐ.நா. தீர்மானத்தை அத்துமீறும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அதிர வைத்த வடகொரியா, கடந்த மாதம் 6–ந் தேதி ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதித்து மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அந்த நாட்டுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிசீலித்து வருகிறது. வடகொரியா தொடர்ந்து அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரியா நடந்து கொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வடகொரியா செயற்கைக்கோளை விண்ணில் ஏவவில்லை, பாலிஸ்டிக் ரக தொலைதூர ஏவுகணை சோதனையைத்தான் நடத்தி உள்ளது என ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறுகின்றன. வடகொரியா செலுத்தியது, ராக்கெட் அல்ல, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை என்று கண்டனம் தெரிவித்து உள்ளன.  வடகொரியாவின் நட்புநாடான சீனாவும் அதிருப்தி தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரியா அதிநவீன ஏவுகணையை பரிசோதித்து பார்த்தாக கூறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூடியது.  வடகொரியா ஐ.நா. தீர்மானத்தை அத்துமீறும் விதமாக இந்த சோதனையை நடத்தி இருக்கிறது.

குறிப்பிடத்தகுந்த நடவடிக்கையை பாதுகாப்பு கவுன்சில் எடுக்கவேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை கடுமையான தடைகளை விதிக்கும் என்று கருதுகிறோம். இந்த தடைகள் முன்பு விதிக்கப்பட்டதை விட கடுமையாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம் என்று அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறிஉள்ளார். எனினும் விண்ணில் செலுத்தியது ஏவுகணை அல்ல, ராக்கெட், செயற்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று வடகொரியா மீண்டும் மறுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்