முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபு இனத் தலைவரை பார்க்க சென்ற காங்கிரஸ் எம்.பி. சீரஞ்சீவி கைது

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் காபு இனத் தலைவரை பார்க்க சென்ற நடிகரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சீரஞ்சீவி ராஜமுந்திரி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காபு சமூக தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் காபு சமூக மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த போராட்டம் மெல்லமெல்ல பல மாவட்டங்களுக்கு பரவி வருகிறது. இட ஒதுக்கீடுக்காக ஏற்கனவே 2 பேர் பலியாகி உள்ளனர். சில இடங்களில் இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பத்மநாபம் உண்ணாவிரதம் நேற்று 4–வது நாளாக நீடிக்கிறது. அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த மனைவி பத்மாவதி மிகவும் சோர்வடைந்து படுக்கையில் விழுந்து விட்டார். மருத்துவ பரிசோதனைக்கு உள்பட இருவரும் மறுத்து வருகிறார்கள். இதனால் கிரிலம்புடி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பத்மநாபம் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படை போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பத்மநாபத்தை சந்திக்க யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. தலைவர்களை கூட சந்திக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. இந்நிலையில், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பத்மநாபத்தை சந்திப்பதற்காக முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யும், நடிகருமான சிரஞ்சீவி கிரிலம்புடிக்கு நேற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரை சந்திக்கும் சிரஞ்சீவியும் அதே காபு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேட்டியளிப்பார் என்பதால் ஏராளமான நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் பத்மநாபம் போராட்டம் நடத்தும் இடத்தின் அருகே காத்திருந்தனர். ஆனால், ராஜமுந்திரி விமான நிலையத்தில் சிரஞ்சீவியையும், அவருடன் வந்த காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த சிரஞ்சீவியையும், காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்துள்ள போலீசாருக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரசார் மற்றும் அவரது ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago