முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

701 புதிய பேருந்துகள் 65 மினி பேருந்துகள் இயக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 144 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய மினி பேருந்துகளை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு வருமாறு:-

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு\வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும்நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதியபேருந்து சேவைகளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில்52 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 97 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 85 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் 93 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 202 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்154 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 18 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 30 வழித்தடங்களில் 65 சிற்றுந்துகள், என மொத்தம் 144 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய சிற்றுந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) ச.வி. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்