முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் நினைவிடம் அருகே உயர்கோபுர மின்விளக்கு, பயணியர் நிழற்குடை: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு மற்றும் நவீன பயணியர் நிழற்குடைகளை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 5  கோடியே  34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வி, நிருவாகம் மற்றும் ஆய்வறிஞர் விடுதிக்  கட்டிடங்களைக் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து  வைத்தார்.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 3  கோடியே 96 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்  3  கோடியே 73 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும்  கட்டிடங்கள்,  ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில் 21  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு மற்றும் நவீன பயணியர் நிழற்குடை  ஆகியவற்றையும்  முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்