முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.11 லட்சம் நிதி உதவி

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

29.9.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வினோதன்  என்பவரின் மகன் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், கெத்தள்ளி கிராமத்தைச் சேர்ந்த  கோலாளப்பா என்பவரின் மகன் குருவன், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூர் கிராமத்தைச்  சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் கோமதுரை, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பிள்ளைச்சாவடி குப்பத்தைச்  சேர்ந்த  ராஜகோபால் என்பவரின் மகன் காத்தவராயன், 30.9.2015 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம்,  ஆரியூர்  கிராமத்தைச் சேர்ந்த  கருப்பண்ணன் என்பவரின் மகன் கருப்புசாமி, 1.10.2015 அன்று தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம்,  சின்னபூம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரின் மகள்  அஞ்சலி மற்றும்  ஹரிணி, சேகர் என்பவரின் மகள் ராஜேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, சுப்பிரமணி என்பவரின் மகள் சரிதா, கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் வட்டம், சூதளம் கிராமத்தைச் சேர்ந்த  முனேகவுடு என்பவரின் மனைவி ஜெயலட்சுமியம்மா ஆகியோர்  பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை  அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்வதுடன்,  அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்