முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த 4 தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிதி உதவியை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறி்க்கை வருமாறு:-

காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில் கடந்த 3 ம்தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார், ஏழுமலை தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு பகுதியைச் சேர்ந்த ஹவில்தார் குமார், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த சிப்பாய் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த சிப்பாய் ராமமூர்த்தி ஆகியோர் சிக்கினர்.

இவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவம் நேற்று அவர்கள் உடல்களை மீட்டுள்ளனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஏழுமலை, குமார், கணேசன், மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்