முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிச்சரிவில் சிக்கி ஆறுநாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரரை மருத்துமனையில் சந்தித்தார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சியாச்சின், பனிச்சரிவில் சிக்கி ஆறுநாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவை டெல்லி ராணுவ மருத்துமனையில் பிரதமர் மோடி சென்று பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  காஷ்மீர்  மாநிலம் சியாச்சின் மலைப்பிரதேசத்தில் 19 ஆயிரத்து 600 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தினர் முகாம் உள்ளது.  இங்கு கடுமையான பனிப் பொழிவை தாங்கிக் கொண்டு நமது  ராணுவ வீரர்கள் அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் கடந்த 3-ம் தேதி அந்த ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது.

அந்த பனிச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 10 ராணுவ வீரர்கள் சிக்கி பனிக் கட்டி மலைக்குள் சுமார் 25 அடி ஆழத்தில் புதைந்தனர். இதையடுத்து பனிக் கட்டிகளை அகற்றி 10 ராணுவ வீரர்களையும் மீட்கும் பணி நடந்தது. அந்த பகுதியில் தோண்டிய போது அடுத்தடுத்து 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பனிக்கட்டி களுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து பனிக் கட்டிகளை அகற்றியபோது ஒரு ராணுவ வீரர் உயிருக்கு போராடிய  நிலையில் புதைந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக  மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டனர். அந்த  இடத்திலேயே அவருக்கு முதல்  உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஜம்மு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரரின்  பெயர் ஹனுமந்தப்பா.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவரது உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது.  இதையடுத்து அவர் ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டு சிறப்பு ஆராய்ச்சி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.  மேலும் தனது ட்விட்டரில் ஹனுமந்தப்பா குணமடைய நாடு முழுவதும் பிரார்த்தனை  செய்யும் என கூறி உள்ளார். இதுபோல் ராணுவ தளபதி தபீர் சிங் மருத்துவமனைக்கு வந்து ஹனுமந்தப்பா உடல நலம் குறித்து விசாரித்தார்.இதற்கிடையே ராணுவ மருத்துமனைக்கு சிகிக்சை பெற்றுவரும் ஹனுமந்தப்பாவின் குடும்பத்தார் அரசு செலவில் விமானம்  மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்