முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்துடன் பேச்சுவார்த்தை: ஆங்கான்–சூகி மியான்மர் அதிபராகும் வாய்ப்பு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

யங்கூன் - மியான்மரில் ராணுவத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் ஆங்கான்–சூகி அதிபராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மியான்மரில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஜனநாயகத்துக்காக போராடி சுமார் 19 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக் காவலில் இருந்த ஆங்கான்–சூகியின் குடியரசுக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தேசிய லீக் கட்சி மியான்மரில் புதிய ஆட்சி அமைக்கிறது. தற்போதைய அரசின் பதவிக்காலம் வருகிற மார்ச் 31–ந் தேதி வரை உள்ளது. அதன் பின்னர் புதிய ஆட்சி அமையும். எனவே, தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர் புதிய அதிபராகும் வாய்ப்பு உள்ளது. இருந்தும் அக்கட்சி தலைவர் ஆங்சாங்–சூகி அதிபராக முடியாது.

ஏனெனில் மியான்மர் சட்டப்படி வெளிநாட்டினரை திருமணம் செய்யும் அந்நாட்டு குடிமகனும் அவர்களது வாரிசுகளும் மிக உயரிய பதவி வகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கான்–சூகி இங்கிலாந்தை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். எனவே, அவரோ அவரது மகன்களோ அதிபர் பதவி வகிக்க முடியாது. ஆனால் தற்போது ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள் நினைத்தால் ஆங்கான்–சூகி அதிபராக முடியாமல் தடுக்கும் 59(எப்) அரசியல் சட்டப் பிரிவை பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்காலிகமாக நீக்க முடியும்.

ஆகவே ராணுவ தலைமை கமாண்டர் ஜெனரல் மின் ஆங்கியாங்குடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது பாராளுமன்றத்தில் குடியரசுக்கான தேசிய லீக் கட்சிக்கு போதிய அளவு மெஜாரிட்டி இருப்பதால், ஆங்கான்–சூகி அதிபராகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, வருகிற மார்ச் 17–ந் தேதி அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பெயர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. 3 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர்களில் அதிக அளவு எம்.பி.க்கள் ஓட்டுகளை பெறுபவர் அதிபர் ஆவார். மீதமுள்ள 2 பேர் துணை அதிபர்களாக பதவி வகிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago