முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க இலக்கு: நிதின் கட்கரி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ - நாட்டில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க இலக்கு வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த தொடர்ந்து பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, வாரணாசி மற்றம் கொல்கத்தா இடையே கங்கை நதி வழியாக கடல் விமானப் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இதுபற்றி லக்னோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது.,

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆறுகள் வழியாக வங்காளதேசம் மற்றும் மியான்மர் வரை வணிகம் செய்ய நீர்வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும். இன்னும் 6 மாதங்களுக்குள் பராக்காவில் இருந்து பாட்னா வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கும் பணி முடிக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் பஸ் மற்றும் கார்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.  செயற்கைகோள்களில் பயன்படுத்துவதை போன்ற லித்தியம்-ஐயோன் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கங்கையை சுத்தப்படுத்தி கனவை நிறைவேற்றும். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago