முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு நிதி, ஆயுத உதவிகளை செய்கிறது: டேவிட் ஹெட்லி

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மும்பை - தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐ.எஸ்.ஐ., நிதி, ஆயுத மற்றும் பிற தார்மீக உதவிகளை செய்கிறது என்று டேவிட் ஹெட்லி வாக்குமூலம் கொடுத்து உள்ளான்.   அமெரிக்காவில் இருந்தபடி, மும்பை தாக்குதல் தொடர்பாக மும்பை சிறப்பு கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2-வது நாளாக வாக்கு மூலம் கொடுத்துவரும் டேவிட் ஹெட்லி, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐ.எஸ்.ஐ., நிதி, ஆயுத மற்றும் பிற தார்மீக உதவிகளை செய்கிறது என்று கூறிஉள்ளான்.

மும்பை தாக்குதலில் ஜாகீர்-உர்-ரகுமான் லக்விக்கு ரியாஸ் கைப்பாவையாக செயல்பட்டார் என்று நான் கேள்விப்பட்டேன் என்றும் கூறிஉள்ளான்.   கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தெற்கு லாகூரில் இருந்து சுமார் 300 மையில் தொலைவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மவுனாலா மசூத்தை சந்தித்து பேசினேன். லாகூரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 2003-ம் ஆண்டு அப்துல் ரகுமான் பாசாவை சந்தித்து பேசினேன்.

பாசாவுடன் பாகிஸ்தான் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றேன், பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்யும் மருந்து ஷாப் ஷாவிடம் இந்தியாவிற்குள் ஆயுதங்களை கடத்த உதவியை கேட்டோம்.  மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை கண்காணிக்கவும் என்னிடம் லஷ்கர்-இ-தொய்பா கேட்டுக் கொண்டது. மும்பை கடற்பகுதியில் உள்ள சாலைகளையும் புகைப்படம் எடுத்து அனுப்பினேன்.

தகவல்களை சேகரிக்க எனக்கு சாஜித் மிர் மற்றும் அபு காப்பா வழங்கிய ஜி.பி.எஸ். கருவியை பயன்படுத்தினேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளான். கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாஜ் ஓட்டலை படம் பிடித்தேன், வீடியோ எடுத்தேன். ஆனால் மும்பை ஏன்? குறிவைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது. குறிப்பிடத்தக்க நிலையில் மும்பை குறிவைக்கப்பட்டது எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளான்.  சிறப்பு அரசுதரப்பு வக்கீல் உஜ்வால் நிகாம் தெரிவிக்கையில், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணியாற்றியதை டேவிட் ஹெட்லி ஒத்துக்கொண்டு உள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் நிதிஉதவி செய்வதையும் டேவிட் ஹெட்லி வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறிஉள்ளார்.  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கமோ, பாகிஸ்தான் உளவுப்பிரிவோ எனக்கு பணம் எதுவும் தரவில்லை. நான் பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக பணியாற்றினேன். பாகிஸ்தான் ராணுவத்தில் பலரை சந்தித்து பேசினேன். அவர்கள் (லஷ்கர்-இ-தொய்பா) போலி தாஜ் ஓட்டலை உருவாக்கினர். இருப்பினும், இந்திய பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகளின் கூட்டமானது ரத்து செய்யப்பட்டது. ஆயுதங்களை கொண்டு செல்லமுடியாது என்ற காரணத்தினால், தாஜ் ஓட்டலின் ஆலோசனை கூடத்தில் தாக்குதல் நடத்துவது தொடர்பான திட்டம் கைவிடப்பட்டது என்றும் டேவிட் ஹெட்லி கூறிஉள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்