முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுடனான குழு புறப்பட்டுச் சென்ற எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் விமானப்படைத்தளத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ-சீன எல்லையோரம் உள்ள பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும்,

ஆலோசனை நடத்தவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு, கார்வால் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாலா ராஜ்ய லக்‌ஷ்மி ஷா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் உள்பட மொத்தம் எட்டுபேர் நேற்று அம்மாநிலத்தில் உள்ள எல்லையோரப் பகுதியான டெஹ்ரியை நோக்கி எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான எம்.ஐ. 17வி5  என்ற ஹெலிகாப்டரில் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அவருடன், மக்களவை உறுப்பினர் ராஜ்ய லட்சுமி ஷா உள்பட 8 பேர் அந்த ஹெலிகாப்டரில் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த விமானி ஹெலிகாப்டரை அருகிலி்ருந்த ஹிண்டன் விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கினார். பின்னர், வேறொரு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் உத்தரகாண்டுக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கிரண் ரிஜ்ஜூ பிறகு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்