முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

இஸ்லமாபாத் - டி-20 உலக கோப்பை மற்றும் ஆசியக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் வருகிற 24–ந் தேதி முதல் மார்ச் 6–ந் தேதி வரை முதலாவது டி-20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதை தொடர்ந்து 6–வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8–ந் தேதி முதல் ஏப்ரல் 3–ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. எஞ்சிய ஒரு அணி எது என்பது தகுதி சுற்று போட்டி மூலம் முடிவாகும். இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 27-ம் தேதி மோதுகின்றன.

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணி சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை, 8 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி காலக்கெடு விதித்து இருந்தது.  ஆனால், பாகிஸ்தான் அணி மட்டும் கூடுதல் அவகாசம் கேட்டிருந்த நிலையில், நேற்று உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  அணிக்கு ஷாகித் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் விவரம் வருமாறு:-  ஷாகித் அப்ரிடி(கேப்டன்), முகம்மது ஹபீஸ், சோயிப் மாலிக், முகம்மது இர்பான், ரம்மன் ரயீஸ், வஹாப் ரியாஸ், பாபர் அசாம், இப்திகார் அகமது, முகம்மது ஆமீர், உமர் அக்மல், சர்பாஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ரம் மன்சூர். முன்னதாக, ஆசிய கோப்பை, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago