முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

சென்னை - தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. சார்பில் பொள்ளாட்சி ஜெயராமன், ஐ.எஸ். இன்பதுரை கலந்து கொண்டனர். தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22-ம் தேதி முடிவடைகிறது. இதேபோல புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் நேற்று நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாட்சி ஜெயராமன் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 9 கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை தனித் தனியேயும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர், கலெக்டர்கள், டிஜிபி மற்றும் எஸ்.பி.க்களுடன் நஜீம் ஜைதி இன்று தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, புதுவையில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். பணப்பரிமாற்றத்தை தடுக்க வேண்டும். அது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஒருவருக்கு 2 தொகுதிகளில் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்து புகார் செய்தனர். அரசுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். தமிழகம் மற்றும் புதுவைக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

புதிய வாக்காளர்களை சேர்க்க முகாம் நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். வாக்காளர்கள் ஓட்டு போட்டவுடன், அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் பணி சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் உழவர்கரை, உருளையன்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்