முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா அபாயமான கட்டத்திலே உள்ளார்: மருத்துவர்கள் தகவல்

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா இன்னும் அபாயமான கட்டத்திலே உள்ளார் என்று ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஹனுமந்தப்பா தொடர்ந்து உயிருக்கு போராடிதான் வருகிறார், அவருடைய மருத்துவ நிலையானது தொடர்ந்து மிகவும் அபாயமான கட்டத்திலே உள்ளது, என்று ராணுவ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹனுமந்தப்பா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து செயற்கை சுவாச முறையின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் நிலையை ஆர்.ஆர். மருத்துவமனையில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

நிபுணத்துவம் வாய்ந்தவர்களை கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடல் மீண்டும் வெப்பம் அடைதல் மற்றும் உடலின் குளிர்ச்சியான பகுதிகளுக்கு இரத்தல் செல்லுதல் ஆகிய சிக்கல் காரணமாக அவருக்கு இன்னும் 24 மணி நேரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சியாச்சின் பனிச்சரிவில் புதைந்து போய் 6 நாட்களுக்கு பின்னர், 36 வயதான கர்நாடக மாநில வீரர் ஹனுமந்தப்பா தெய்வாதீனமாக 25 அடி உயர பனிக்கட்டிக்கு அடியில் உயிருடன் இருப்பது மோப்ப நாய் உதவியுடன் திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. கான்கிரீட்டை விட கடினமான பனிக்கட்டியை அதிநவீன எந்திரங்களின் உதவியுடன் வெட்டி எடுத்து, நேற்று முன்தினம் அவர் மீட்கப்பட்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்