முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபார் ஊழல் விவகாரம்: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி - ஒத்திவைப்பு

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - மதுபார் ஊழல் விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நேற்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருவதால் நேற்று 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின. சோலார் மோசடி தொடர்பாக நேற்று பிரச்சினை எழுப்பிய அவர்கள், நேற்று மதுபார் ஊழல் விவகாரத்தை எழுப்பினர்.

நேற்று சட்டசபை கூடியதும் மதுபார் ஊழல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதனை சபாநாயகர் நிராகரித்தார். மேலும், இவ்வழக்கு கோர்ட்டில் உள்ளதால் இதுபற்றி விவாதிப்பது சட்டமன்ற விதிமுறைகளை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறினார். அத்துடன், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற வரும்படி காங்கிரஸ் தலைவர் முரளிதரனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவையை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், நேற்று நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மாநிலத்தையே உலுக்கிய மதுபார் ஊழல் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்