முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுடன் உறவை மேம்படுத்த இந்தியா ஆர்வம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தகவல்

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  இஸ்லாமிய புரட்சியின் 37வது ஆண்டு தின கொண்டாடட்டத்தை யொட்டி  ஈரானுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அந்த நாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் ஈரானுடன் இந்தியா உறவை மேலும் அதிகரிக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரக்கானிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று அனுப்பியவாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்தியாமற்றும் ஈரான் இடையிலான உறவு நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது பல நூற்றாண்டுகளாக உறவு மேம்பட்டு வருகிறது. ஈரானுடன் பல்வேறு துறைகளில் உறவை மேம்படுத்த இந்தியா விரும்கிறது. இரு நாடுகள் இடையேயான உறவு குறிப்பிடத்தக்க வகையில் வலிமை பெற்று வருகிறது. இந்த இருநாடுகள் இடையே நல்ல பலன் அளிக்கும் உறவுகள் மேம்பட வேண்டும். இரு நாட்டு நல்லுறவால் ஒட்டு மொத்த பிராந்தியமும் ஸ்திரத்தன்மை மற்றும் வளமை பெறும்.

இஸ்லாமிய புரட்சி ஈரானில் ஏற்பட்டு 37வது ஆண்டு ஆவதையொட்டி அந்த நாட்டிற்கு எனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 5வது பெரிய நாடாக ஈரான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்