முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க அதிகாரிகளை சி.பி.ஐ மிரட்டுகிறது: கெஜ்ரிவால் குற்றசாட்டு

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016
Image Unavailable

புதுடெல்லி - எனது செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கக்கோரி அதிகாரிகளை சி.பி.ஐ மிரட்டுவதாக டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- பா.ஜனதா அரசு எனக்கு எதிராக சி.பி.ஐ.யை தூண்டி விட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி எனது முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் சோதனை நடந்தது. எனது அரசின் பணிகளை மத்திய  அரசு முடக்கப் பார்க்கிறது.  இது போன்ற சூழ்நிலைகளில் தான்  எனது அரசு மயிரிழையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. சி.பி.ஐ. எனது முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரை குறி வைத்து இருக்கிறது. அவர் தான் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு டெண்டர்கள் விடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.

தற்போது எனது அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 6, 7 அதிகாரிகளை சி.பி.ஐ. வரவழைத்து நாள் முழுவதும் காத்திருக்க வைத்து அவர்களிடம் எனது செயல் பாடுகள் பற்றி விசாரிக்கிறார்கள். முதல்வர் குறிப்பு எடுத்து கொடுப்பது யார்? அவரது கடிதங்களை அனுப்புவது யார்? யார், யார் வந்து கெஜ்ரிவாலை சந்திக்கிறார்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். இதே போல் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் சி.பி.ஐ. மிரட்டி இருக்கிறது.

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட 77 அதிகாரிகள் இது போல் நேரில் வரவழைக்கப்பட்டு சி.பி.ஐ.யால் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். நான் பெங்களூரில் இருந்து திரும்பியதும், 2 அதிகாரிகள் என்னைச் சந்தித்து மத்திய அரசு உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறது என்று கூறினார்கள். இது போல் பலசம்பவங்கள் நடந்து இருக்கிறது. இது பற்றி நான் வெளியில் சொல்ல வில்லை. மத்திய அரசின் செயல்குறித்து இனி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.  இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago