முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஹினூர் வைரத்தை பெறக்கோரிய வழக்கு: மனுதாரருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் கேள்வி

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

லாகூர் -  கோஹினூர் வைரத்தை பாகிஸ்தான் பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்து வசம் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியா நீண்ட காலமாக திருப்பி தருமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அதை இங்கிலாந்திடம் இருந்து கேட்டுப்பெறவேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை தொடுத்த வழக்கறிஞர் ஜாவீத் இக்பால் ஜாஃப்ரீ என்பவர், பாகிஸ்தானின் சொத்தான கோஹினூர் வைரத்தை சட்ட விரோதமாக இங்கிலாந்து உரிமை கொண்டாடி வருவதாகவும்,  இந்தியாவுக்கு  இங்கிலாந்து இந்த வைரத்தை கொடுக்க மறுத்து வரும் நிலையில், இந்த வைரத்தின் முதல் உரிமையாளரான பாகிஸ்தான் இதை கேட்டுப்பெற வேண்டும்.

கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்டுப்பெறுவது பாகிஸ்தான் அரசின் கடமை” என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றம், பாகிஸ்தானின் எந்த அரசாங்க சட்டத்தின் கீழ் கோஹினூர் வைரத்தை திரும்ப கோர முடியும் என்ற விவரத்தை பதிவு செய்யுங்கள் என்று மனுதாரரை கேட்டுக்கொண்டது. மேலும்,  பாகிஸ்தான் மத்திய அரசும், பஞ்சாப் மாகாண சட்ட அதிகாரிகளும்  வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி ஆஜராகி, வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா என்பதற்கான வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக, கடந்த டிசம்பரில் இதே கோரிக்கை அடங்கிய மனுவை , லாகூர் உயர் நீதிமன்ற பதிவாளர்  அலுவலகம்,  நீதிமன்றத்தால், இங்கிலாந்து ராணியை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இது தங்களின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என கூறி மனுவை நிராகரித்து இருந்தது  குறிப்ப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்