முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு டோனி நோட்டீஸ்

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - தான் மேட்ச் பிக்சிங் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து மறுப்பு செய்தி வெளியிடவில்லையென்றால் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று டோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் சன்ஸ்டார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் டோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விளக்கம் அளித்த சுனில் தேவ், “ இவை அனைத்தும் அபத்தமானது.

இந்த செய்தியை வெளியிட்ட இந்தி நாளிதழ் மீது வழக்கு தொடர நான் திட்டமிட்டுள்ளேன். இது போன்ற மோசமான கருத்துக்களை யாராவது பரப்பினாலும், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பேன்” என்றார். இதையடுத்து டோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''இந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை. என்னை அவமதிக்கும் வகையிலும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மறுப்பு செய்தி வெளியிடவில்லையென்றால் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் ''என்று அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்