முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜிரிய அகதிகள் முகாமில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மைதுகுரி - நைஜிரிய அகதிகள் முகாமில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 78 பேர் காயமடைந்தனர். நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுப் படைகளுக்கு கடும் சவாலாக விளங்குவதுடன், அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். அண்டை நாடுகளான சாட், நைஜர் ஆகிய நாடுகளிலும் நடத்தும் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் மீட்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3-வது பெண் தீவிரவாதி தாக்குதல் நடத்துவதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்