முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து பி.சி.சி.ஐ 19–ந் தேதி ஆலோசனை

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை - லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது பற்றி விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் 19–ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான லோதா குழு சில பரிந்துரைகளை செய்தது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஒருவர் 3 முறைக்கு மேல் நிர்வாகியாக இருக்கக்கூடாது. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஒட்டு, மந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள், நிர்வாகியாக செயல்படக்கூடாது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அந்த கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனால் பி.சி.சி.ஐ இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.

இது தொடர்பாக வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக மார்ச் 3–ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு கடந்த 4–ந்தேதி பி.சி.சி.ஐ.க்கு கெடு விதித்தது. சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளிப்பதற்கு முன்பு அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் கருத்தையும் கேட்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 19–ந்தேதி சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. மும்பையில் இந்த கூட்டம் நடக்கிறது. லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டியின் போது ஒவ்வொரு ஓவருக்கு பிறகும் விளம்பர இடைவேளை வருகிறது. உணவு இடைவேளை மற்றும் தேனீர் இடைவேளையின் போது மட்டுமே விளம்பரங்களை பயன்படுத்த வேண்டும் என்று லோதா குழு பரிந்துரை செய்கிறது. இந்த பரிந்துரையை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.400 கோடியாக குறையலாம். அதாவது ரூ.1,600 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு போட்டிக்கும் டெலிவிசன் ஒளிபரப்பு உரிமைக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.43 கோடி வழங்கி வருகிறது. லோதா குழு பரிந்துரையில் இது ஒரு ஆட்டத்துக்கு ரூ.8 முதல் ரூ.10 கோடியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்