முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபை தேர்தல் காங்கிரஸ் வெற்றியை தடுக்க காங்கிரசால் மட்டுமே முடியும்: ராகுல்காந்தி பேச்சு

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை, தடுக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அங்கு, சட்டசபை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– கேரள காங்கிரஸ் கட்சியினர் மிகவும் புத்திசாலிகள். மற்ற கட்சியினரை விட உயர்வானவர்கள்.

ஆனால் உங்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம். அதனை களைந்தால் வேகமாக முன்னேறலாம். வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். இப்போது கேரளாவில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். காங்கிரசார் தங்களுக்குள் சண்டை போட்டு கொள்ளும் நேரம் இதுவல்ல. இப்போது தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் கருத்து வேறுபாடுகள் குறித்து பேச தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் உங்களை சந்திப்பேன். காங்கிரஸ் ஆட்சியின் வெற்றியை காங்கிரசால் மட்டுமே தடுக்க முடியும்.பாரதீய ஜனதா கட்சி மதவாதத்தை முன் வைத்து பிரசாரம் செய்கிறது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்