முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று சந்தித்து பேசினார்.  தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் சுகநாதன் திருமணம் வருகிற 17–ந் தேதிசென்னை தேனாம்பேட்டை  காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது.இதையொட்டி தமிழிசை சவுந்தரராஜன் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து திருமண பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமைச் செயலகத்துக்கு குடும்பத்துடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

எனது மகன் டாக்டர் சுகந்தன்  திருமண அழைப்பிதழை வழங்குவதற்கு முதல–மைச்சரிடம் அனுமதி கேட்டு இருந்தோம். அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அனுமதி தந்து இருந்தார். அதன்படி நான் எனது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், மகன் சுகந்தனுடனுடன் வந்து முதல்வரை  சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினோம். அவர் மிகுந்த அன்போடு அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். 17–ந் தேதி காலையில் காமராஜர் அரங்கில் திருமணம். மாலையில் வரவேற்பு என்று சொல்லி திருமணத்தில் பங்கேற்க அழைத்தோம். அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டிப்பாக திருமணத்துக்கு வருகிறேன் என்று கூறி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.‘‘பிரதமர் நரேந்திரமோடி சுவைமிகு தேனீர் துளிகள்’’ என்று நான் எழுதிய புத்தகத்தையும் முதலமைச்சரிடம் வழங்கினேன்.இது குடும்ப நிகழ்ச்சி என்பதால் வேறு எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்