முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குசந்தைகள் வீழ்ச்சி எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - பங்கு சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாய் தங்கம் விலை ஒரு பவுனுக்கு ஒரே நாளில் ரூ.920 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. கடந ்த ஆண்டு மத்தியில் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். கடந்த ஆண்டு உறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏறத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து கடந்த மாதமும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

இந்த மாதம் தங்கம் விலை அிக அளவில் உயரத் தொடங்கியது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ரூ.920-க்கு மேல் உயர்ந்திருந்தது.  இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22.144 ஆக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.920 அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.920 அதிகரித்து இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தங்கம் விலை போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்