முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டமிட்டது : ஹெட்லி

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை - மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் உள்ள டெல்லி தேசிய ராணுவ கல்லூரியை தாக்குவற்கு அல் கொய்தா திட்டமிட்டது என்று பாகிஸ்தான் அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி தனது வாக்குமூலத்தில் அதிச்சி தகவல்களை வெளியிட்டார். லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத அமைப்பும்  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனமும் மும்பை விமான நிலையம், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், மற்றும் மும்பையில் உள்ள கடற்படை விமான நிலையத்தை தாக்க திட்டமிட்டன என்றும் ஹெட்லி தனது வாக்கு மூலத்தில் கூறினார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் உள்ளார். அவர் அங்கிருந்து வீடியோ கான்பரன்சில் மும்பை கோர்ட்டில் தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார்.

அவர் நேற்று அளித்த வாக்குமூலத்தில் மும்பை கோர்ட்டின் சிறப்பு நீதிபதி ஜி.ஏ சனாப்பிடம் கூறியதாவது, நான் சிவசேனை கட்சியின்  உறுப்பினர்களுடன் நெருங்கிய  தொடர்புகொள்ள விரும்பினேன். ஏனெனில்  பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு சிவசேனையின் தலைமை அலுவலகத்தையும், சிவசேனையின் தலைவர் மறைந்த பால்தாக்கரேவை கொல்லவும் திட்டமிட்டது. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் மும்பை கடற்படை விமான நிலையத்தையும் தாக்குவதற்கு திட்டமிட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை அதைரியப்படுத்தும் வகையில் நான் பேசினேன்.

இந்த இரு இடங்களும் அதிக பாதுகாப்பு உள்ள இடங்கள் ஆகும் எனவே அங்கு தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறினேன். என்னை வழி நடத்தி சென்ற ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனமும், லஷ்கர் இ தொய்பாவும்  மும்பை விமான நிலையத்தையும், கடற்படை விமான நிலையத்தையும் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலின்  போது தகர்க்க திட்டமிட்டார்கள். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலின்போது மும்பை விமான நிலையத்தினை தாக்குவதற்கு தேர்வு செய்யவில்லை. இதனல் பாகிஸ்தான் மேஜர் இக்பால் அதிருப்தி அடைந்தார். 2008ம்ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னரும் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு அல்கொய்தா திட்டமிட்டது.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் நான் இலியாஸ் காஷ்மீரியை(அல்கொய்தா) 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தித்தேன் . அப்போது அவர் இந்தியாவிற்கு மீண்டும் வரவிரும்புவதாகவும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடவடிக் கைகளை மேற் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தேசிய ராணுவ கல்லூரி மற்றும் சில முக்கிய இடங்களை தாக்குவதற்கு அவர் குறிப்பிட்டார். இவ்வாறு ஹெட்லி நேற்று அளித்த 4வது நாள் வாக்கு மூலத்தில் நீதிபதியிடம் பாகிஸ்தான் சதித்திட்டங்களை விவரமாக தெரிவித்தார். ஹெட்லி தற்போது அப்ருவராக மாறி மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்