முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஷ்கர் -இ-தொய்பா , ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு பயிற்சி: முஷாரப் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

 புதுடெல்லி - லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெர்வஸ் முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே தீவிரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் உடனடியாகநிறுத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
 இந்தியாவில்பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல் நடவடிக் கைகளில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளதை அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதை பாகிஸ்தான் அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி மும்பை நீதிமன்றத்தில்  அளித்த வாக்குமூலத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மும்பை தாக்குதலுக்கான முழு சதியும் பாகிஸ்தானிலேயே நடந்துள்ளது. பாகிஸ்தான் அதனை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாப் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உதவியதை ஒப்புக் கொண்டார். அவரைத்தொடர்ந்து தற்போது டேவிட் ஹெட்லி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் பாகிஸ்தானின் தொடர்பை உறுதி படுத்தியுள்ளார். இந்த நிலையில் இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தை நடத்து வது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் விவரம் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தான் ஏற்கவில்லை என ஊடக தகவல்கள் வெளியாகின. அரசு,அதிகாரப்பூர்வ அலுவலக தரப்பில்தான் செல்ல விரும்புகிறது. ஊடக தகவல்கள் அடிப்படையில் அரசு செயல்படவிரும்பவில்லை. சியாச்சின் பனி மலை பகுதியில் இருக்கும் ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார். ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அந்த விவகாரம் குறித்து இரு தரப்பு இடையேதான் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்