முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட குற்றச்சாட்டு: பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராப் நடுவராக செயல்பட தடை விதித்தது பிசிசிஐ

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அவருக்கு 5 ஆண்டுகள் நடுவராக செயல்பட தடை விதித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது, சூதாட்ட தரகர்களிடம் மதிப்புமிக்க பரிசு பொருட்கள் பெற்றதாகவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதையடுத்து, பி.சி.சி.ஐ தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் ஜோதிரதித்யா ஸ்கேண்டியா,நிரஞ்சன் ஷா ஆகியோர் அடங்கிய  ஒழுங்கு குழு இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தியது. 

இந்த விசாரணைக்குழுவிற்கு நேரில் ஆஜராகாமல் எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஆசாத் ராப் அளித்தார். இந்த விளக்கத்தின் அடிப்படையில் ஆசாத் ராப் குற்றம் செய்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆசாத் ராப்புக்கு 5 ஆண்டுகள் நடுவராக செயல்பட பிசிசிஐ தடை விதித்தது. ஐசிசியின் நடுவர் குழுவின் எலைட் பிரிவில் இருந்த ஆசாத் ராப் மீது சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, பாகிஸ்தான் அவரை திரும்ப பெற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்