முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 113-ஆக உயர்வு

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

தைபே -  தைவானில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது. தைவானின் தைனான் நகரை மையமாகக்கொண்டு கடந்த 6-ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், தைனான் நகரில் உள்ள வெய்-குவான் என்ற 17 மாடி கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 327 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  எனினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அவர்களில்  நேற்று காலை வரை 113 பேரின் உடல் மீட்கப்பட்டன. இன்னும் 4 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.  எனவே அவர்களின் உடலும் அங்கு சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிட பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக மேம்பாட்டாளர் லின் மிங்-ஹை மற்றும் 2 என்ஜினீயர்களை தைவான் அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். மேலும் லின் வடிவமைத்த பல்வேறு கட்டிடங்களையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்