முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக டி-20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ஆனார் டோனி

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி - ராஞ்யில் நடைப்பெற்ற இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதன் மூலம் 30 டி-20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி-20 அணிக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றிகளை வாங்கிக்கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். 

டோனி தலைமையில் இந்தியா 56 போட்டிகளில் விளையாடி 30-ல் வெற்றியை ருசித்துள்ளது. 24 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. மற்றொரு போட்டி ‘டை’யில் முடிந்துள்ளது.  இதுதவிர பல முக்கிய நிகழ்வுகளும் நடந்தது. அவைகள் வருமாறு:- இந்தியா-இலங்கை போட்டியில் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்தார். இதுதான் இலங்கை அணிக்கெதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 2014-ம் அண்டு 29 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ரோகித் சர்மா 106 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இலங்கை அணியின் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதில் நான்கு பேர் டக்அவுட் ஆகியிருந்தனர். யுவராஜ் சிங் டக்அவுட் ஆனார். இதன்மூலம் டி-20 போட்டியில் முதன்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். தவான் 22 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி-20 தொடரில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டி-20 போட்டியில் இதுதான் அவரது முதல் அரைசதம் ஆகும். அரைசதம் அடித்ததுடன் முதல் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

இந்த வெற்றிதான் இலங்கை அணிக்கெதிராக இந்தியா பெறும் மூன்றாவது பெரிய வெற்றியாகும். இதற்கு முன் இங்கிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 73 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தியிருந்தது. அஸ்வின் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். டி-20 போட்டியில் இது அவரது 2-வது சிறப்பான பந்து வீச்சாகும். இதற்கு முன் 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்