முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் புதுமுக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. வேகப்பந்து வீசுவதோடு, அதிரடி பேட்டிங்கிலும் வல்லவர். குஜராத்தை சேர்ந்த ஹர்திக், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார் பாண்ட்யா.

4 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் இடம் பிடித்து கலக்கி வரும் ஆஷிஷ் நெஹ்ரா தற்போதைய இந்திய அணி குறித்து தனது கருத்துக்களை பிசிசிஐ தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். அப்போது பாண்ட்யா குறித்தும் பாராட்டினார் நெஹ்ரா. அப்போது நெஹ்ரா கூறியதாவது:

ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா என இந்திய வேகப்பந்து வீச்சு துறை வலுவாக இருப்பதாகவே உணருகிறேன். இத்தனை ஆண்டு கால ஆட்டத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு மடைமாற்றம் செய்து வருகிறேன். அவ்வப்போது, ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

ஹர்திக் பாண்ட்யாவை நான் பரோடாவை (குஜராத் நகரம்) சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்றுதான் கூறி அழைப்பது வழக்கம். ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போலவே மிகவும் அசால்டான முகபாவம் கொண்டவர் அவர்.  இவ்வாறு நெஹ்ரா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்