முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்வி, ஹபீஸ் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - தீவிரவாதிகளான லக்வி மற்றும் ஹபீஸ் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது என்றும், அப்படி நடவடிக்கை எடுத்தால் அது வெறும் கண்துடைபே என்று  டேவிட் ஹெட்லி நேற்று வாக்குமூலத்தின் போது தெரிவித்துள்ளான். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அப்ரூரவராக மாறியுள்ளார்.

அமெரிக்க சிறையில் இருக்கும் அவர் வீடியோ கான்பரசிங் மூலம் மும்பை ஐகோர்ட்டில் கடந்த 8–ந் தேதியில் இருந்து வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை தாக்குதல் சம்பவ பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதை அவர் உறுதி செய்தார். நேற்று 5–வது நாளாக டேவிட் ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:– மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. லஷ்கா–இ–தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. லக்வி, ஹபீஸ் சயீத் ஆகியோர் மீது பாகிஸ்தான் புலனாய்வு குழு நடத்திய விசாரணை மேலோட்டமானது தான்.

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாகிஸ்தான் அரசு எடுக்காது. விசாரணை வெறும் கண்துடைப்பே. அவர்களை பாகிஸ்தான் அரசு ஒன்றும் செய்யாது என்று லஷ்கர்–இ–தொய்பா அமைப்பை சேர்ந்த எனக்கு நெருக்கமானவரான சஜீத் மீர் தெரிவித்தார். ஹபீஸ் சயீத்துக்கு ‘எல்டர் அங்கிள்’ என்றும் லக்விக்கு ‘யங்கர் அங்கிள்’ என்றும் நாங்கள் இமெயிலில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்துவோம். புனேயில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்த்து விட்டு வருமாறு ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு உத்தரவிட்டார். இதன்படி 2009–ல் அந்த இடத்தை சென்று நான் பார்வையிட்டேன். இதே போல் 2009 மார்ச் மாதம் புஷ்கர், கோவா ஆகிய இடங்களையும் பார்த்தேன். இந்த 3 நகரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை வீடியோ எடுத்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago