முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் - தி.மு.க. தேர்தல் கூட்டணி

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரசும், திமுகவும் தற்போது தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கூட்டணி  அமைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் நேற்று சென்னை வந்தார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், காங்கிரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆனால், இதை அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். காரணம் இலங்கையில், அதிபராக இருந்த ராஜபக்சே அப்போது, ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார். இந்த கொடுஞ்செயலை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்தது. அதுமட்டுமல்ல ராஜபக்சேவுக்கு பல வகையிலும் காங்கிரஸ் உதவி செய்தது. அதை திமுக வேடிக்கை பார்த்தது. அப்படிப்பட்ட இரு கட்சிகளும் தற்போது, தேர்தலுக்காக கூட்டணியை அமைத்துள்ளன. இதை அரசியல் நோக்கர்கள் கண்டித்துள்ளனர்.  மேலும், காங்கிரஸ், திமுக 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள் இந்திராகாந்தி காலத்தில் நகர்வாலா ஊழல் நடைபெற்றது. பின்னர், ராஜீவ்காந்தி காலத்தில் போபார்ஸ் ஊழல் நடைபெற்றது. அதன்பிறகு மன்மோகன்சிங் காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடைபெற்றன.

அதில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் நாட்டின் இமாலய ஊழல் ஆகும். இதில், திமுகவை சேர்ந்த ஆ.ராசா உள்ளிட்ட பலர் கைதானார்கள். அதன்பிறகு, நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் போன்ற பல ஊழல்கள் நடைபெற்றன. இப்படி ஊழலுக்கு பேர்போன இரண்டு கட்சிகளும் தற்போது, தேர்தல் கூட்டணி அமைத்திருப்பது தான் வேடிக்கையான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பொய்யான காரணத்தை கூறி விலகியது திமுக. தற்போது, அதை மறந்து விட்டு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்பதில், சிறிதும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்