முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் பல்வேறு சேவை கட்டணங்கள் 2 மடங்காக உயருகிறது

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவிலில் பல்வேறு சேவை கட்டணங்கள் 2 மடங்காக உயருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்ய சேவையாக ஆண்டுக்கு 450 உற்சவம் நடக்கிறது. இதில் பல சேவைகள் வி.ஜ.பி.க்கள் மட்டுமே பார்க்க முடிகிறது. வெவ்வேறு சேவைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சேவை கட்டணத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்க தேவஸ்தானம் சார்பில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு கட்டண சேவைகளை உயர்த்த பரிந்துரைகள் செய்தது. இந்த பரிந்துரைகளை அறங்காவலர் குழு ஏற்பது என முடிவு செய்து உள்ளது.
அடுத்து நடக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புக்குழு பரிந்துரை செய்து உள்ள சேவை கட்டண உயர்வு விவரம் வருமாறு:– சுப்ரபாத சேவை கட்டணம் ரூ.150-இருந்து 400 ரூபாயாகவும், தோமாலை சேவை கட்டணம் ரூ.220-இருந்து ரூ.1000 ஆகவும், அர்ச்சனை ரூ.220-இருந்து ரூ.1000-ஆகவும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரூ.1250-இருந்து ரூ.2000-ஆகவும், சகஸ்ரகலச அபிஷேகம்ரூ.850-இருந்து ரூ.1500-ஆகவும், திருப்பாவாடை ரூ.850-இருந்து  ரூ.1500-ஆகவும், பூரா அபிஷேகம் ரூ.750-இருந்து  ரூ.2000-ஆகவும்,

நிஜ பாத தரிசனம் ரூ.200-இருந்து  ரூ.500-ஆகவும், வஸ்திர அலங்கார சேவை ரூ.12,500-இருந்து  ரூ.25,000-ஆகவும், சகஸ்ரதீப அலங்கார சேவை ரூ.200-இருந்து  ரூ.500-ஆகவும், வசந்த உற்சவம்ரூ.300-இருந்து  ரூ.500-ஆகவும், கட்டண பிரமோற்சவம்ரூ.200-இருந்து  ரூ.500-ஆகவும், கல்யாண உற்சவம் ரூ.1000-இருந்து  ரூ.1500-ஆகவும், இது தவிர சுதர்சன தரிசன டிக்கெட் ரூ.50–ல் இருந்து ரூ.100 ஆகவும், 300 ரூபாய் டிக்கெட் ரூ.400 ஆகவும், 500 ரூபாய் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் ரூ.800 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறும்போது,

‘‘திருமலையில் 1998–ம் ஆண்டுக்கு பிறகு கட்டண சேவை டிக்கெட் உயர்த்தப்படாமல் உள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த கட்டண உயர்வு கட்டாய தேவையாக உள்ளது. கட்டண உயர்வு மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்’’ என்றார். லட்டு பிரசாத விலையை உயர்த்தவும் சிறப்பு குழு பரிந்துரை செய்தது. ஆனால் இதனை ஏற்க அறங்காவலர் குழு மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்