முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்வதில் பாகுபாடு காட்டவில்லை - வெங்கய்யா நாயுடு

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

இந்தூர் :  மத்திய அரசின் பிரதான திட்டமான ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்வதில் எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில்   உள்ள இந்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்றுதுவங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஸ்மார்ட் சிட்டி நகரங்களை தேர்வு செய்வதில் பாஜகவோ அல்லது நானோ எந்த வித முடிவையும் புகுத்த வில்லை. முதல் கட்டமாக மத்திய அரசு 20நகரங்களை ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்து இருக்கிறது. நகரங்களின் திறனை பொருத்தே அந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி நகரங்களை தேர்வு செய்வதில் மத்திய அரசு எந்தவித பாகுபாடும் காட்டவில்லை.பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசி கூட ஸ்மார்ட் சிட்டி நகர திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை. மத்திய அமைச்சர்கள் உள்ள லோக்சபா தொகுதிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை.
நகர்புற மையங்களும் மாநில அரசுகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றன. அந்த நகரங்கள் ஏன் தேர்வு செய்யப்பட வில்லை என்று பின்னோக்கி பார்க்க வேண்டும்.

நவீன வசதிகளை மக்கள் பெற வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் ஸ்மார்ட் சிட்டி நகரமாக தேர்வு செய்யமுடியும். இந்தூர் முதல் கட்ட தேர்வில் 20 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், இந்தூரை தனது அரசு உலக நகரமாக உருவாக்க முடிவெடுத்து இருக்கிறது. அந்த நகர மேம்பாட்டிற்கு அடுத்த 5ஆண்டுகளில் ரூ18ஆயிரம் கோடியை செலவழிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்