முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பொருளாதாரபிரச்சினையில் பாதிக்காத ஒரே நாடு இந்தியா: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உலக பொருளாதாரம்  சரிவடைந்தபோது அதில் சிக்காத ஒரே நாடு இந்தியாவாகும்.இந்திய அரசின் கொள்கைளால் இந்தியாவுக்கு பொருளாதார பிரச்சினை ஏற்படவில்லை என்று பிரதமர் மோடி நேற்று டெல்லியில் கூறினார். சமூக  சீர்திருத்தவாதி அறிஞர் தயானந்த சரஸ்வதியின் 140வது பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், உலகம் பெரும்  பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருக்கிறது என்று உலக வங்கி , சர்வதேச நிதியம் எச்சரித்தன. ஆனால் இந்தியா மட்டுமே முன்னேற்ற பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்தது. இந்திய அரசு மேற் கொண்ட நடவடிக் கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று உலகில் உள்ள அனைவரும் தெரிவித்தார்கள்.

நமது நாடு வறுமையில் இருந்தும் கல்வியறிவின்மையில் இருந்தும் மீண்டால் நமது பிரச்சினைகள் தீர்ந்து விடும். சமூக முன்னேற்றத்திற்கு முத்ரா மறறும் திறன் மேம்பாடு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. முத்ரா திட்டத்தின் மூலமாக ஒரு லட்சம் பேர் பலன் பெற்று இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் ரூ1லட்சம் கோடி அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவியை அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 65சதவீதத்தினர் 35வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். உலகிலேயே மிக இளைமையான நாடாக இந்தியா இருக்கிறது.

ஆகையால் நாங்கள் திறன் மேம்பாடு திட்டத்தை இளைஞர்களுக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல் புதிய அமைச்சகத்தையும் உருவாக்கி இருக்கிறோம். அந்த அமைச்சகத்திற்கு உரிய சொந்த பட்ஜெட் மூலம் அந்த திட்டம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. 2030ம் ஆண்டில் பல நாடுகளின் மக்கள் தொகை வயதான நபர்களை கொண்ட நாடாக இருக்கும். அப்போது பணி செய்வதற்கான இளைஞர்கள் தேவைப்படுவார்கள். இந்த நாடுகளில் இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும் தகுதி வாய்ந்த தொழில் நுட்ப திறன்பெற்றவர்களாகவும் இந்தியாஅனுப்பும்.நமது இளைஞர்கள் திறன் பெற்றவர்களாக ஆக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்