முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் எரிசக்தி-சுகாதாரம்- நிதித்துறைகளில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா ஆர்வம்

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

கான்பெர்ரா :  இந்தியாவில் எரிசக்தி, சுகாதாரம், கல்வி, நிதித்துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலியா மிகுந்த ஆர்வமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு துறை அமைச்சர் ஆண்ட்ரூ ராப் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

இந்தியா இந்த ஆண்டு தனது பொருளாதார வளர்ச்சியை 7.6சதவீதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயல்நாடுகளில் உள்ள கம்பெனிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக அளவில் முதலீட்டினை பெறுவதற்கு இந்தியா தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் 120கோடி மக்கள் உள்ளனர்.  எனவே ஆஸ்திரேலிய வணிகத்திற்கு நல்ல வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன.இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் கூட்டு பங்கேற்பாக முதலீட்டை மேற் கொள்ள விரும்புகிறோம். சுகாதாரம், கல்வி,நிதித்துறை, எரி சக்தி துறையில் இந்தியாவில் அதிக முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலியா விரும்புகிறது. இந்தியாவை முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக பிரதமர் மோடி நிர்வாகம் சிறப்பாக மாற்றியுள்ளது.வளரும் ஆதார வளங்களில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கு ஆஸ்திரேலியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் கொள்கை தெளிவு நிலையை அறியவும் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்