முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவகர்லால் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஹபீஸ் ஆதரவுடன் நடந்துள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவிவற்கு ஆதரவாக நடந்த நிகழ்ச்சி லஷ்கர் இ தொய்பா தீவிரவாத நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆதரவுடன் நடந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் குற்றம் சாட்டினார். ராஜ்நாத்தின் இந்த குற்றச்சாட்டை ஆதாரப்பூர்மாக நிரூபிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தின.

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட்டது  தவறானது என ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் கனியா குமார் நடத்தினார். இந்த போராட்டத்தை  40 மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சியை நாட்டிற்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் கனிகியா நடத்தி உள்ளார் என அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏன் போலீஸ் நடவடிக் கை எடுத்தீர்கள் என்று இடது சாரி தலைவர்களும் ஐக்கிய ஜனதா தலைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கேள்வி எழுப்பினர். பல்கலைக்கழகத்தில் நடந்த அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சி லஷ்கர் இ தொய்பா தீவிரவாத நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆதரவுடன் நடந்துள்ளது. இது உண்மை. இந்த விஷயத்தை நாடு புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி துரதிர்ஷ்ட வசமானது. அலகாபாத்தில் ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜவகர் லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவின் 3வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்து இருப்பது வேதனையானது ஆகும்என்றும் அவர் தெரிவித்தார்.  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஹபீஸ் சயீத் ஆதரவுடன் நடந்துள்ளது என ராஜ்நாத் கூறியிருப்பதற்கு ஆதாரத்தை கூற வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார். ராஜ்நாத்தின் கூறுவது மாணவர்களுக்கு எதிரானதீவிரமான குற்றச்சாட்டு ஆகும். ராஜ்நாத் தனது குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ராஜ் நாத் சிங் கூறிய குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் ஆதாரத்தை தர வேண்டும். அந்த குற்றச்சாட்டை அனைவரும் ஆதரிப்பதற்கு அவர் உரிய ஆதாரத்தை அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஹபீஸ்சயீத் ட்விட்டரில் தகவல் பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்தே ராஜ்நாத் சிங் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில்  நடந்த நிகழ்ச்சி தொடர்பாக 8 மாணவர்களில் 7பேர் கல்வியை தொடருவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்