முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்வு

திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - கச்சா எண்ணெய் விலை சரிவால் ஆசிய சந்தைகள் எழுச்சி பெற்றன. இதனால் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தபோது, மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய வாராந்திய வீழ்ச்சியை சந்தித்தது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகத்தின்போது உலக பொருளாதார மந்த நிலை மீதான பயம் நீங்கியதுடன், கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் ஆசிய சந்தைகள் எழுச்சி பெற்றன. இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்திய சந்தைகள் ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 23 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. வர்த்தக முடிவில் 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12 புள்ளிகளில் முடிவுற்றது.

வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 23,622.64 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 23,223.43 புள்ளிகளுக்கும் சென்றது. பா.ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு 2-வது மிகப்பெரிய ஒருநாள் எழுச்சி இதுவாகும். இதற்கு முன், 2015ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி 728.73 புள்ளிகள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 7,162.95 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்