முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை 32 காசுகள் குறைப்பு : டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்வு

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நேற்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை வரிகள் உள்பட ரூ.59.10 காசுகளாகவும், டீசல் விலை உயர்வின் காரணமாக ரூ.45.62 காசுகளாகவும் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்