முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனை கட்டாத கம்பெனிகளின் விவரத்தை அளிக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி கட்டாத கம்பெனிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் கடந்த 2005-ம் ஆண்டு பொதுமக்கள் நலனுக்காக வாதாடுவோர் மையம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசுகளுக்கு சொந்தமான வீட்டுவசதி மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம் சில கம்பெனிகளுக்கு வழங்கியுள்ள கடன்கள் குறித்து புகார் தெரிவித்தது.

இந்த மனு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், யு.யு.லலித், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், 2015-ம் ஆண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் வாரா கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதுபோன்ற வாரா கடன்கள் பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு கடனை கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்க வங்கிகள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அவர் கூறியதும் நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.

அதிகளவில் கடன்கள் வாங்கி இன்னும் கட்டாமல் கம்பெனிகளை நடத்திக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா? என்றும் நீதிபதிகள் அவரிடம் கேட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாநில அரசுகளுக்கு சொந்தமான வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பெரிய அளவில் கடன்களை வழங்கின. அவர்களிடம் இருந்து கடனை திரும்ப வசூலிக்க கூடுதலான திட்டங்கள் எதுவும் அவைகளிடம் உள்ளதா? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

கம்பெனி கடன் மறுகட்டமைப்பு திட்டத்தின்கீழ் கடன் மறுகட்டமைக்கப்பட்ட கம்பெனிகளின் பட்டியல் எங்களுக்கு தேவை. ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்ப கட்டாத கம்பெனிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அதனை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago