முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் தற்கொலை குறித்த பாஜக எம்.பி.யின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016      அரசியல்
Image Unavailable

மும்பை  - விவசாயிகள் தற்கொலை குறித்து பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது, இது ஒரு ‘ஃபேஷன்’, ‘டிரெண்ட்’ என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மும்பை போரிவில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி, “வேலையின்மை, மற்றும் பட்டினியால் அனைத்து விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஒரு ஃபேஷன் போய்க்கொண்டிருக்கிறது,

இது ஒரு டிரெண்ட் ஆகி வருகிறது. மகாராஷ்டிரா அரசு விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கிறது என்றால் மற்ற மாநிலங்கள் ரூ.7 லட்சம் அளிக்கின்றன.  இப்படியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒரு போட்டியே நிலவுகிறது” என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பயிர் நாசம் மற்றும் கடன் தொல்லை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது இவருக்கு ஃபேஷனாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோபால் ஷெட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்