முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 267 புள்ளியும், நிப்டி 83 புள்ளிகளாகவும் உயர்வு

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - மும்பை பங்குச்சந்தையில் நேற்று சென்செக்ஸ் 267.35 புள்ளி உயர்ந்தும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 83.30 புள்ளிகளாகவும் உயர்ந்தது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தபோது, மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ், 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய வாராந்திய வீழ்ச்சியை சந்தித்தது.

ஆனால் இந்த வாரம் சந்தையில் சாதகமான போக்கு காணப்படுகிறது. உலக பொருளாதார மந்த நிலை மீதான பயம் நீங்கியதுடன், கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் சந்தைகள் எழுச்சி பெற்றுள்ளன. 2-வது நாளாக நேற்று பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 267.35 புள்ளிகள் உயர்ந்து 23,649.22 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 10 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பங்குகள் விலை உயர்வில் டாப்-5 பட்டியலில் டாக்டர் ரெட்டிஸ், ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ, ஐசிஐசிஐ வங்கி, லூபின் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. வீழ்ச்சியடைந்த நிறுவனங்களில் மாருதி சுசுகி, பெல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் டாப்-5 பட்டியலில் உள்ளன. இதேபோல் தேசிய பங்குச்சந்தையும் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. வர்த்தக முடிவில் நிப்டி 83.30 புள்ளிகள் அதிகரித்து 7,191.75 புள்ளிகளில் நிலைபெற்றது. ஹாங்காங், ஜப்பான, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய சந்தைகள் உயர்வடைந்தன. ஷாங்காய் சந்தை 0.16 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago