முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7-7.5சதவீதமாக அதிகரிக்கும்: பொருளாதார சர்வே

வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் முதல் 7.5சதவீதம் வரை அதிகரிக்கும் என்று பொருளாதார சர்வே தெரிவித்துள்ளது. வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய 3 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த சர்வே வெளியாகி இருக்கிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தொடரில் நேற்று முன்தினம்(பிப்25) ரயில்வே பட்ஜெட்டை ரயில் வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இந்த பட்டஜெட்டில் எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை.

மேலும் ரயில்வேயின் 2016-17ம்  ஆண்டிற்கான பட் ஜெட் நிதி ஒதுக்கீடாக ரூ1.21லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆண்டின் செலவின அளவைக்காட்டிலும்  ரயில்வே துறைக்கு 20சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ரயில்வே பட்ஜெட்டை தொடர்ந்து நேற்று பொருளாதார சர்வே வெளியிடப்பட்டது. இந்த சர்வேயில் இந்தியாவின் வரும் நிதியாண்டுபொருளாதார வளர்ச்சி 7சதவீதம் முதல் 7.5சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய இந்த சர்வேயில் மானிய செலவினங்களை குறைக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டபொருளாதார சர்வேயில் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும். தற்போதைய நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.1சதவீதம் முதல் 8.5சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள பொருளாதார சர்வேயில் நாட்டின் வரும் நிதியாண்டின் வளர்ச்சி குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருளாதார சர்வேயை நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து கூறுகையில், வரும் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 3.5சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வேயில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் எதிர்பார்க்காத சீரமைப்புகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி 7-7.5சதவீதமாக இருக்கும் என தற்போது மதிப்பிட்டுள்ள சர்வே கடந்த 2015-16ம் ஆண்டிற்கான வளர்ச்சி 7.6சதவீதமாக இருக்கும் என கூறிஇருந்தது. உலக பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை காணப்பட்டதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் இல்லை. இந்தியா இன்னும் 2ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி)8-10சதவீதமாக இருக்கும் என்றும் சர்வே குறிப்பிட்டு இருக்கிறது.

வரும் நிதியாண்டில் 7வது சம்பள கமிஷனை அரசு அமல் படுத்த வேண்டியிருப்பதால் அந்த ஆண்டு அரசுக்கு சவால் மிக்கதாகவே இருக்கும்.2016-17ம் ஆண்டில் பணவீக்க விகிதம் 4.5சதவீதம் முதல் 5சதவீதம்என குறையும்  தற்போது நாட்டின் ஜி.டி.பியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1-1.5சதவீதம் என்ற குறைந்த நிலையிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருப்பதால் விலைவாசி கட்டுப்பாட்டிலேயே இருக்கும். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பணவீக்க விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் பேரல் எண்ணெய் விலை 35டாலராக இருக்கிறது.

மூலதன வரத்து குறையும் பட்சத்தில் ரூபாயின் மதிப்பு சீராக குறைவதை சர்வே அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.ஆசியாவில் கரன்சியின் மதிப்பு மறு சீரமைப்பு நடந்துள்ளது. அதேப்போன்று சீனாவிலும் இதேப்போனன்று கரன்சி சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவும் கரன்சி சீரமைப்புக்கு தயாராகியுள்ளது. வரி விலக்குகளை படிப்படியாக நீக்க வேண்டும் என்றும் பொருளாதார சர்வே கூறியுள்ளது.2018-19ம்ஆண்டில் இந்திய வங்கிகளின் மூலதன தேவை ரூ1.8லட்சம் கோடியாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்