முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்

திங்கட்கிழமை, 29 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி  -  2016-17ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று(திங்கட் கிழமை) பாராளுமன்றத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கில் எந்த மாற்றமும் இல்லை. புகையிலைப் பொருட்கள் மற்றும் காருக்கு புதிய வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அவர் 3வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய எழுந்தபோது, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

பின்னர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய விவரங்கள் வருமாறு,
வருமானவரி விலக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது முதியோருக்கு வருமான வரி விலக்கு விலக்கு உச்சவரம்பு ரூ3லட்சமாகவும் மற்றவர்களுக்கு ரூ 2.5லட்சம்  லட்சமாகவும் உள்ளது.  குறைந்த வருவாய் பிரிவினர் பயன்பெறும் வகையில் வருமான வரிக்கழிவு ரூ2ஆயிரத்தில் இருந்து ரூ5ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  

ரூ5லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு 87ஏ பிரிவின் கீழ் ரூ5ஆயிரம் வரிச்சலுகை அளிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1கோடி குறைந்த வருவாய் பிரிவினர் பயன்பெறுவார்கள். வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை அதிகரிக்கப்படுகிறது.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான வரிக்கழிவு சலுகை ரூ20ஆயிரத்தில் இருந்து ரூ60ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ரூ35லட்சத்துக்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ50ஆயிரம் கூடுதல்  வரிச்சலுகை வழங்கப்படும்.

சிறுகுறு நிறுவனத்தின் வரிச்சலுகை உச்சவரம்பு ரூ2கோடியாக உயர்த்தப்படுகிறது.ரூ5கோடிக்கு குறைவாக வணிகம் செய்யும் நிறுவனங்களில் வரி 29சதவீதமாக குறையும். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும் வகையில் சுங்கம், கலால், வரியில் மாற்றம் செய்யப்படுகிறது. புதியதாக தொடங்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.  ஓய்வூதிய நிதியில் இருந்து 40சதவீதம் திரும்ப பெறுவோருக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.60சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி விலக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு ரூ1கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். அந்த வரி 12சதவீதத்தில் இருந்து 15சதவீதமாக உயருகிறது. புகையிலைப்பொருட்கள் மீதான வரி 10சதவீதத்தில் இருந்து 15சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இதனால் சிகரெட் விலை உயரும்.

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி 23சதவீதமாக உயர்த்தப்படுகிறது.  ரூ10லட்சத்துக்கும் மேல் கார் வாங்கினால் கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கப்படும். இதனால் கார்கள் விலை உயரும். சிறிய ரக கார்களுக்கு 1சதவீத ம் , டீசல் கார்களுக்கு 2.5சதவீதம், சொகுசு கார்களுக்கு 4சதவீதம் வரி உயர்த்தப்படும். கணக்கில் காட்டா கறுப்பு பணத்திற்கு 45சதவீதம் வரி விதிக்கப்படும். வரிஏய்ப்பு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழக்கும் திட்டம் எளிதாக்கப்படும்.  11 புதிய வரி தீர்ப்பாயங்கள்கொண்டு வரப்படுகிறது. 

ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு 3ஆண்டுகளுக்கு மேட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 1சதவீதம் குறைக்கப்படுகிறது. நடப்பாண்டில் மொத்த செலவினம் ரூ19.78லட்சம் கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ2.5லட்சம் கோடியாக இருக்கும்.புதிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25சதவீதம் வரி விதிக்கப்படும். குளிர் சாதன பொருட்கள் மீது வரி உயர்த்தப்படுகிறது. தங்கம், பிராண்ட் துணிகள் மீதான வரி உயர்கிறது. இதனால் தங்கம் , சட்டைகள் விலை உயரும். ஆண்டுக்கு ரூ50கோடிக்கு கீழ் உள்ள 13 வகை வரிகள் விலக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago