முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை : காங்கிரஸ் கட்சி விமர்சனம்

திங்கட்கிழமை, 29 பெப்ரவரி 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கு இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு ஊக்குவிப்புத் திட்டங்களும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறியதாவது  இந்த பட்ஜெட் எதிர்கால விளக்கங்களுக்குரியதே தவிர நடப்பு விவகாரங்களை சீர்தூக்கும் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கான உடனடி ஊக்குவிப்புகள் எதுவும் இல்லை.  துரதிர்ஷ்டவசமாக என்ன செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்படவில்லை. இன்றைய தேதியில் நம் கண் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் வேலை வாய்ப்பு மற்றும் வேளாண் துறை. இவை பற்றி ஒன்றுமே இந்த பட்ஜெட்டில் இல்லைஇவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறுகையில் இந்த பட்ஜெட் மிகவும் பொதுவாக, பரந்துபட்ட ஒரு சித்திரத்தை அளிக்கிறது, இவையெல்லாம் எப்படி தகைகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார். மணிஷ் திவாரி கூறும்போது, பட்ஜெட்டில் கற்பனை வளம் இல்லை. மொத்தமாக பார்த்தால் பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் பலவீனப்படுத்தவே செய்யும். சந்தை நிலவரங்களும் பட்ஜெட்டுக்கு எதிர்மறையான போக்குகளையே அறிவிக்கிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago