முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.02 குறைந்தது : டீசல் விலை ரூ 1.47அதிகரித்தது

திங்கட்கிழமை, 29 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.  இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரங்களைக் கணக்கில் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.  பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் விலைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிக்கடி மாறுபாடு அடைவதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விற்பனையில் பெரும்  நஷ்டம் ஏற்படுவதாக கூறிவந்தன.  இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே விலைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம். என மத்திய அரசு எண்ணெய் விலை நிர்ணயத்தை தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துக் கொண்டது.

கடைசியாக கடந்த 17-ம் தேதி விலைகள் மாற்றி அமைக்கப்பட்ட போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டு டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரிகரிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று தற்போதும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டீசல் வாகனங்களை வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்