முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 1,800 நகை கடைகள் அடைப்பு : ரூ.15 கோடி வர்த்தகம் பாதிப்பு

புதன்கிழமை, 2 மார்ச் 2016      வர்த்தகம்
Image Unavailable

மதுரை  - மதுரையில் 2 ஆயிரம் நடை கடைகள் அடைக்கப்பட்டன, இதனால் ரூ.15 கோடி வரை வர்த்தகம் பாதிப்படைந்தது. மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த கலால் வரி விதிப்புக்கு தங்க நகை நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் தங்க நகை கடைகள் அடைக்கப்படும் என அறிவித்தனர்.

இதை தொடர்ந்து மதுரையில் நேற்று நகை கடைகள் அடைக்கப்பட்டன. நகை கடை பஜார் உள்பட மதுரையில் பல பகுதிகளில் இயங்கி வந்த சுமார் 2 ஆயிரம் நகை கடைகள் அடைக்கப்பட்டன. கடை அடைப்புக்கான காரணம் குறித்து கடை முன்பு எழுதப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலை முதலே நகைக்கடை பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சம்மேளன முதன்மை ஆலோசகர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டப்போது மதுரையில் 1,800 நகைக்கடைகள் உள்ளன. நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago