முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கலாபவன் மணி மரணம்: நடிகர்கள் கமல், மம்முட்டி உள்ளிட்டோர் இரங்கல்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரணமடைந்ததையொட்டி தென்னிந்திய திரையுலகினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவ்ர் கலாபவன் மணி. தமிழில் ஜெமினி படத்தின் மூல அறிமுகம் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று சுய நினைவு அற்ற நிலையில் அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கலாபவன் மணி உடலில் மெத்தனால் என்ற நச்சுப் பொருள் கலந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கலாபவன் மணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகம் உள்ளது என கூறினார். இந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

இந்த தனிப்படை நேற்று முன்தினம் இரவு கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் விசாரணையை தொடங்கியது. மேலும் நேற்று அந்த இல்லத்தில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் கலாபவன் மணி உடலில் மெத்தனால் கலந்திருந்தது என்ற புகாரை அடுத்து உடற்கூறு சோதனைக்காக அவரது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று உடற்கூறு சோதனை நடைபெற்றது. இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.

2016-ம் ஆண்டு ஆரம்பித்து முழுதாக 3 மாதம் முடியவில்லை. அதற்குள் 7 திரை நட்சத்திரங்கள் இதுவரை மலையாளத் திரையுலகில் உயிரிழந்துள்ளனர். இதில் கலாபவன் மணியும் இணைந்துள்ளார். நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா(51) கடந்த ஜனவரி 25 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மலையாளப் பாடகியான ஷான் ஜான்சன் பிப்ரவரி 5 ம் தேதி அவரது அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடந்தார். மலையாளத்தின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓஎன்வி குருப் (84) பிப்ரவரி 13 ம் தேதி உயிரிழந்தார்.  மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜாமணி (60) கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி இறந்து போனார். இசையமைப்பாளர் ராஜாமணி இறந்த அதே நாளில் ஒளிப்பதிவாளர் அனந்தக் குட்டன்(61) இறந்து போனார். 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனந்தக் குட்டன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 14 ம் தேதி அவர் இறந்து போனார்.

பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளை(41) பிப்ரவரி 27 ம் தேதி கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல நடிகர் கலாபவன் மணி (45) கல்லீரல் பிரச்சினை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை 7 நட்சத்திரங்கள் உயிரிழந்திருப்பதால் மலையாளத் திரையுலகில் அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தியை கேட்டு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கலாபவன் மணி. கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிர் இழந்தார். அவரது மரண செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கலாபவன் மணி என்ற சிறந்த நடிகருக்கு என் மரியாதை! நல்ல நண்பர். அவருடன் செலவிட்ட நேரத்தை மறக்கவே முடியாது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மலையாள திரையுலகின் மிகவும் திறமையான நடிகர். அவருக்கு 46 வயது தான். அண்மை காலமாக பல திறமைசாலிகளை இழந்து வருகிறோம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் கலாபவன் மணி சார்! தென்னிந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடன் சேர்ந்து பாபநாசம் படத்தில் பணியாற்றினேன். திறமைசாலி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். இசையமைப்பாளார் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

அருமையான நடிகர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் கலாபவன் மணி என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார். கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்த நடிகர் மம்மூட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். என்னால் அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. மணி சேட்டா.. நீங்கள் இன்னும் நிறைய நடிக்க வேண்டி இருந்தது. இது நியாயம் அல்ல. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். என்று ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். என் நண்பன் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தேன். மற்றும் ஒரு மலையாள சகோதரர் கல்லீரல் பிரச்சனையால் இறந்துள்ளார். மிகவும் திறமையானவர் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago