முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதி மீறல்: தி.மு.க–த.மா.கா.வினர் மீது வழக்கு

புதன்கிழமை, 9 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.தேர்தல் நடைமுறைகளை அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சரியாக பின்பற்றுகிறார்களா? என்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை பல்லவன் இல்லம் முன்பு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. சார்பில் நேற்று முன் தீனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முறைப்படி தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசில் தேர்தல் அதிகாரி பத்மநாபன் புகார் அளித்தார். அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் தொ.மு.ச. நிர்வாகியான சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மயிலை மாங்கொல்லையில் நேற்று முன் தீனம்  த.மா.கா. சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 15 பேனர்கள் வைப்பதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. அதை மீறி 50 இடங்களில் பேனர் வைக்கப்பட்டது. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து த.மா.கா. நிர்வாகிகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்